Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர்பாபு!

முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
10:21 AM Jul 14, 2025 IST | Web Editor
முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Advertisement

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பண்ணிசை திருமுறை இசைக்க ஓதுவார்களோடு பெண் ஓதுவார்கள் பங்கேற்ற சிறப்பான குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க ஏழு நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இதனை கோயிலில் தட்டோடு மேல் 2000 பேர் அமர்ந்து தரிசிக்கும் வசதி செய்யப்பட்டது.

Advertisement

25 ட்ரோன்கள், அவற்றுடன் புனித நீர் தெளிப்பான்கள், பொதுமக்கள் திருப்பரங்குன்றம் நகரின் அனைத்து பகுதிகளிலும் குடமுழுக்கை கண்டு களிக்கும் வகையில் பிரம்மாண்டமான எல்சிடி ஸ்கிரீன்கள், கழிப்பறை மற்றும் போதுமான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. உணவு வசதி மருத்துவ வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. வருகின்ற பக்தர்கள் பொறுமை காத்து தரிசனம் செய்ய வேண்டுகோள் விடுகிறேன். திரு குடமுழுக்கு நாளான இன்று முருகனை தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் அடுத்த 48 நாட்கள் இங்கு வந்து தரிசனம் செய்தாலும் கிடைக்கும்.

திமுக ஆட்சியில் தான் இப்படிப்பட்ட குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் கடவுள் முருகனுக்கு அறம் சார்ந்த திருப்பணி தான் இறைப்பணி என்பதை எடுத்துக் கூறும் வகையில் இந்த ஆட்சி நடத்தி காட்டி உள்ளது. இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு அப்பாற்பட்டு அவரவர் வணங்கும் இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்யும் வகையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையிலும் இந்த ஆட்சி இந்த குடமுழுக்கை சிறப்புடன் நடந்து கொண்டுள்ளது. 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என்பதால் இந்த நாளில் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்யலாம் எம்பெருமான் முருகப்பெருமானின் பூரண அருள் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு பொருத்தவரை நாள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நானும் மதுரை அமைச்சர் மூர்த்தி, திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட முறை வருகை தந்து ஆய்வு செய்து பொதுமக்கள் மட்டுமின்றி அர்ச்சகர்களும் கூட மனமகிழ்ச்சி அடைகின்ற வகையில் இந்த குடம் முழுக்கை சிறப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 3347 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. முருகனின் ஆறுபடை வீட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகக்கடவுள் உறையும் கோவில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன" என்றார்.

Tags :
devoteeDMKMaduraiMinister SekarBabumurugantemplethiruparakundramthiruparakundramtemple
Advertisement
Next Article