For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TheGOAT படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்த சினேகா!

04:05 PM Sep 06, 2024 IST | Web Editor
 thegoat படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்த சினேகா
Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் திரைப்படத்தை, திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் இணைந்து நடிகை சினேகா பார்த்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் விஜய் நடிப்பில் உருவான தி கோட் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் மிகப் பெரிய உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். படம் விஜய்க்கு மிகப்பெரிய ஃபேர்வெல் பார்ட்டியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, விஜய் பார்க் திரையரங்கில் தி கோட் திரைப்படத்தை நடிகை சினேகா பார்த்துள்ளார்.

நடிகை சினேகாவை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பட்டாசு
வெடித்து, சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, பிள்ளையார் சிலையை
வழங்கினார்கள். பின்னர் நடிகை சினேகா கேக் வெட்டி அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டினார். தொடர்ந்து செடிகளையும் வழங்கினார்.

பின்னர் 10 நரிக்குறவ குழந்தைகள் மற்றும் பெண்மணிகளுக்கு கோட் பட டிக்கெட்டை
வழங்கி படம் பார்க்க வைத்தார்.

Advertisement