Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

02:11 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னையில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம்,  ‘சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தொடர்பான சோதனை’ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.  அதன்படி, இன்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள்  அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததனர்.  சோதனையின் போது அந்த நபர் இடுப்பு அணிந்திருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.  அந்த நபர் கடத்தி வந்த தங்கம் சுமார் 2.4 கிலோ இருக்கும் எனவும், அதன் மதிப்பு ரூ. 1.3 கோடி இருக்கக் கூடும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்கம் கடத்தி வந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குவைத் விமான நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய இடுப்பு பெல்ட்டை எடுத்துக் கொண்டு, அவர்கள் வைத்து இருந்த புதிய இடுப்பு பெல்ட்டை மாட்டி விட்டதாகவும், சென்னை விமான நிலையம் வெளியே வேறொருவர் தன்னை அடையாளம் கண்டு தங்கபெல்ட்டை பெற்றுக் கொள்வார் எனவும் தங்கம் கை மாறியதும் உடனே உனக்கான பணம் சேர்ந்து விடும் என அந்த நபர் தெரிவித்ததாக கடத்தலில் ஈடுபட்டவர் தெரிவித்தார்.

இது போன்ற கடத்தல் தொழிலுக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும்  அவர் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது.  சம்பந்தப்பட்ட நபரின் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestChennaichennai airportCrimeGoldKuwaitsmuggling
Advertisement
Next Article