For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SLvsENG | இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்கு - சதம் விளாசிய JoeRoot!

09:14 PM Aug 31, 2024 IST | Web Editor
 slvseng   இலங்கை அணிக்கு 483 ரன்கள் இலக்கு   சதம் விளாசிய joeroot
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 483 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 மற்றும் பென் டக்கெட் 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிலன் ரத்நாயகே மற்றும் லகிரு குமாரா தலா 2 மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி 427 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிஷான் மதுஷ்கா (7), திமுத் கருணாரத்னே (7), பதும் நிசங்கா (12), ஏஞ்சலோ மேத்யூஸ் (22), தனஞ்ஜெயா டி சில்வா (0), தினேஷ் சண்டிமால் (23) என இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து கமிந்து மெண்டிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் எடுத்த அவர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

231 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். அவர் 121 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 37 ரன்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிலன் ரத்நாயகே மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இலங்கையைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 482 ரன்கள் முன்னிலை பெற்றதால், இலங்கைக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement