சிவகாசி ஆசிரியர் தாக்குதல் சம்பவம் - 4 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம்!
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் நேற்று, மது போதையில் வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியரைமாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பள்ளியில் கடந்த ஓராண்டுக்கு மாணவர்கள் இருவர் ஆசிரியரை அறிவாளால் தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இதனால் பள்ளியில் பாடம் நடத்தும் தங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு இல்லை எனவும் பள்ளி வளாகத்தில் காவல்துறையினரின் பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து பள்ளி வளாக முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே, மது போதையில் தாக்கிய 2 மாணவர்களையும் தாக்குதலுக்கு
உறுதுணையாக இருந்ததாக மேலும் 2 மாணவர்களையும் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குஉறுதுணையாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்த உள்ளததாக காவல்துறையினர் தெரிவிதுள்ளனர்.