For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
06:47 PM Apr 26, 2025 IST | Web Editor
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து   முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (26.4.2025) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 51) க/பெ.மாரிமுத்து, எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (வயது 48) க/பெ.ராமர் மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (வயது 35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (வயது 55) க/பெ.துரைராஜ், கோமதி (வயது 55). பாத்திமுத்து (வயது 55) சு/பெ.அப்துல் காதர், ராபியா பீவி (வயது 50) சு/பெ.தீன்முகம்மது, ராமசுப்பு (வயது 43) க/பெஅன்புசெல்வன், லட்சுமி (வயது 40) க/பெ.தங்கப்பாண்டியன், முனியம்மாள் (வயது 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது
உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement