For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேஜர் முகுந்த் வரதராஜனின் Biopic-ஆக உருவாகும் சிவகார்த்திகேயனின் அமரன்! - லேட்டஸ்ட் அப்டேட்...

01:44 PM Feb 17, 2024 IST | Web Editor
மேஜர் முகுந்த் வரதராஜனின் biopic ஆக உருவாகும் சிவகார்த்திகேயனின் அமரன்    லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

அமரன் டீசரின் மூலம்,  சிவகார்த்திகேயன் சென்னையை சேர்ந்த ராணுவ அதிகாரியான முகுந்த் வரதராஜனாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது.  சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது.

இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.  ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.  ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு,  இந்த படத்தின் டைட்டிலும்,  டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த படத்திற்க்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதே பெயரில் 1992 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் அமரன் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் திரைப்படத்தின் டீசரை பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் 'மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.  தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement