Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூரியின் உணவகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் - Selfi எடுத்துக்கொண்ட ரசிகர்கள் !

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
06:49 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.  இவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எஸ்கே23 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமித் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் செய்தார்.  இதையடுத்து பழனிக்கு செல்லும் வழியில் மதுரை திருநகர் பகுதியில் உள்ள நடிகர் சூரியின் உணவகத்திற்கு சென்று உணவு அருந்தியுள்ளார்.

அப்போது உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
#visitedactorfansMaduraiphotosrestaurantsivakarthikeyanSoori's
Advertisement
Next Article