For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“காந்தாரா சேப்டர் 1” பட தமிழ் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

காந்தாரா சேப்டர் 1 பட தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
05:49 PM Sep 20, 2025 IST | Web Editor
காந்தாரா சேப்டர் 1 பட தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“காந்தாரா சேப்டர் 1” பட தமிழ் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்
Advertisement

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.

Advertisement

2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.

காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. ரிஷப் ஷெட்டி இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக  அரவிந்த் S காஷ்யப் பணியாற்றியுள்ளார். மேலும் B. அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இப்படத்திற்கு  இசையமைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

Tags :
Advertisement