For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'அயலான்' படத்தில் இணைந்துள்ள பிரபலம் யார் தெரியுமா?

08:26 PM Dec 13, 2023 IST | Web Editor
 அயலான்  படத்தில் இணைந்துள்ள பிரபலம் யார் தெரியுமா
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ‘சித்தா’ நடிகர்
சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படமான ‘அயலான்’ அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப்படம் 2024 வரும் பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில், படக்குழு ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டது. 

அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இலவச அனுமதி சீட்டுக்கு ஒரு வாய்ப்பினை படக்குழு அறிவித்தது. அயலான் திரைப்படத்தில்  ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்திருப்பது யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுமென படக்குழு தெரிவித்தது.

இதையெடுத்து, ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

சித்தார்த்தின் குரலில் அயலானைப் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக ரசிகர்கள்
தெரிவித்து வருகின்றனர். ‘அயலான்’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங்கின், ஷரத் கேல்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ’அயலான்’ திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்க ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

இவர்கள் வரிசையில் தற்போது சித்தார்த்தும் இணைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
Advertisement