For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் 'சஸ்பெண்ட்'

10:58 AM Feb 26, 2024 IST | Web Editor
சிங்கங்களுக்கு சீதா  அக்பர் பெயர்  முதன்மை வனப் பாதுகாவலர்  சஸ்பெண்ட்
Advertisement

மேற்கு வங்க வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில்,  முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

திரிபுரா மாநிலம்,  செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்-12ஆம் தேதி ஆண், பெண் என இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.  இதையடுத்து, இந்த இரண்டு சிங்கங்களில் ஒரு சிங்கத்துக்கு அக்பர் என்றும்,  மற்றொரு சிங்கத்துக்கு சீதா என்றும் திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பெயர் சூட்டியிருந்தார்.  இவர் சிங்கங்களை சிலிகுரிக்கு அனுப்பும் போது அதற்கான ஆவணங்களில் அக்பர்,  சீதா என்று குறிப்பிட்டிருந்தார்.

  1. இதையும் படியுங்கள் : சூடு பிடிக்கும் மக்களவைத் தேர்தல் – ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக திட்டம்!

இதையடுத்து,  சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்று பெயர் சூட்டியிருப்பது,  மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விஎச்பி அமைப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  அதில், சிங்கங்களுக்கு சீதா,  அக்பர் என சூட்டப்பட்டிருக்கும் பெயர்களை மாற்ற வேண்டும்.  இந்து மத வழக்கப்படி,  சீதை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். எ னவே, அக்பர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் சிங்கத்துடன் சீதா சிங்கத்தை ஒன்றாக பராமரிப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும். மேலும், ஒரு மதத்தைச் சேர்ந்த,  மரியாதைக்குரிய,  போராளிகள் போன்றவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்குச் சூட்ட வேண்டாம் என்றும்,  இரண்டு சிங்கங்களின் பெயர்களையும் மாற்றுங்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கங்களுக்கு பெயர் வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் முதன்மை வனப் பாதுகாவலர் பிரபின் லால்,  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement