For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

05:15 PM Jan 04, 2025 IST | Web Editor
ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுகை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்( 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுசை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதனிடையே அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு, நேரடியாகச் சென்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சம்பவம் நடந்த இடம், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக குற்றவாளி ஞானசேகரன் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டபோது சைபர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போது சைபர் கிரைம் போலீசார் ஞானசேகரன் செல்போனில் பல்வேறு ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர். ஞானசேகரன் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்களை வேறு யாருக்காவது பகிர்ந்து உள்ளாரா? என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர்தது மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாணவியை மிரட்டும்போது ஞானசேகரன் போனில் SIR என குறிப்பிட்டதாக மாணவி குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த SIR யார்? என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்து வருவதாகத் கூறப்படுகிறது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடத்திய சோதனையில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த பென்ட்ரைவ், பேனா கேமரா, லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஞானசேகரன் இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுப்படுகிறது. ஞானசேகரன் மீது கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ள நிலையில், இது தொடர்பாக அவருடைய இரண்டு மனைவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement