For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் - விவசாயிகள் வேதனை!

04:28 PM Nov 15, 2023 IST | Student Reporter
தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்   விவசாயிகள் வேதனை
Advertisement

சீர்காழியில் பெய்த தொடர் மழையால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.

Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.  இந்த கனமழையால் சீர்காழி அருகே ஆரப்பள்ளம் நல்லூர் பகுதிகளில்
5000-ம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்களை தண்ணீரில் 
மூழ்கியது.

இதையும் படியுங்கள்: ரூ.100 கோடியுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் – ஆத்தூரில் முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம்…

நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.  நல்லூர் உப்பனாறு மற்றும் வடி வாய்க்கால்களை சரியான முறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாராததால் தண்ணீர் வடிவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement