For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தென்னிந்தியாவின் அமீர்கான்" ஆர்.ஜே.பாலாஜி - சிங்கப்பூர் சலூன் விழாவில் பாராட்டு!

04:16 PM Feb 01, 2024 IST | Web Editor
 தென்னிந்தியாவின் அமீர்கான்  ஆர் ஜே பாலாஜி   சிங்கப்பூர் சலூன் விழாவில் பாராட்டு
Advertisement

சிங்கப்பூர் சலூன் பட வெற்றி விழாவில் இயக்குநருக்கு,  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்க செயினை பரிசாக வழங்கினார். 

Advertisement

‘ரெளத்திரம்’,  ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’,  ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல்.  இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜியை வைத்து இயக்கியுள்ள படம்,  ‘சிங்கப்பூர் சலூன்’.  சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான சிங்கப்பூர் சலூன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  இதில்,  படத்தின் வெற்றியையொட்டி,  இயக்குநர் கோகுலுக்கு தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ் தங்க செயினை பரிசாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, விழாவில் பேசிய இமான் அண்ணாச்சி,  இந்த திரைப்படத்தில் ரொம்ப தாமதமாக தான் நான் commit ஆகினேன்.  கள்ளக்குறிச்சி ஒரு
சிறிய கிராமம் தான்.  ஆனால், அந்த ஊரில் கூட படம் ஹவுஸ் ஃபுல்லா ஓடி கொண்டு இருந்தது. ம க்களுக்கு பிடித்த ஒரு படமாக இருந்தது.  என்னுடைய சீனை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சின்னி ஜெயந்த்,  இந்த படத்தை ரொம்ப ரசித்து எடுத்தார் இயக்குநர். விழுப்புரத்தில் இளைஞர்களிடம் கேட்கும் போது எல்கேஜி ஹீரோ நடித்த படம் தானே என்று கூறுகின்றனர். இன்னும் குழந்தைகளின் நாயகனாக தான் ரசிகர்கள் ஆர்.ஜே பாலாஜியை பார்க்கின்றனர்.  என்னுடைய முதல் வெற்றி விழா இது. தென்னிந்தியாவின் அமீர் கான் பாலாஜி என பட்டம் சூட்டினார்.

பின்னர் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  இந்த மாதத்தில் அதிக வசூல் செய்த படங்களில் சிங்கப்பூர் சலூன் முதல் இடம் பிடித்துள்ளது.  மக்கள் அந்த அளவிற்கு கொண்டாடினர். இந்த படத்தில் என்னால் நடிக்க முடியுமா என பாலாஜி கேள்வி எழுப்பினார். ஆனால், இந்த மாதிரி கதையிலும் நடிப்பேன் என proof செய்து விட்டார். இந்த படம் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கிற படமாக இருந்தது. சத்யராஜ் நல்லா நடித்துள்ளார். ரோபோ சங்கர்க்கு உடம்பு சரியில்லை என்றாலும் அவருடைய நடிப்பு அற்புதம்.  வேல்ஸ் நிறுவனத்தில் மீண்டும் இணைகிறார் இந்த படத்தின் இயக்குநர் கோகுல்.  கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தின் ஹீரோவை அறிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.இவர்களை தொடர்ந்து பேசிய படத்தின் நாயகன் ஆர்.கே.பாலாஜி,  நடிகர் அரவிந்த் சுவாமி இந்த படத்தில் உள்ள கதாபாத்திரத்துக்கு ரொம்ப சரியான தேர்வாக
இருந்தது.  போன வாரம் வெளியான படங்களில் இந்த படம் நல்ல வசூலை குவித்தது.
தென்னிந்தியாவின் அமீர் கான் என சின்னி ஜெயந்த் சொன்னது எனக்கே சிரிப்பு வருது. அவரு லெஜன்ட் நான் குழந்தை.  யாருக்காக இந்த படம் எடுத்தோமோ அது சரியாக
சென்றது.  2nd half மக்களுக்கு நல்ல விதத்தில் போய் சேர்ந்து உள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எனக்கு தங்க செயின் போடலனு ரொம்ப வருத்தமாக இருந்தாலும் அவருக்கு என்னை ரொம்ப பிடித்திருக்கிறது.  என்னை ரொம்ப நம்புறாரு. எனக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கும் நபர் தான் ஐசரி கணேஷ் சார்.  செயின் இல்லாமல் யாராவது எனக்கு காப்பு போடுவாங்கணு காத்து கொண்டு இருக்கிறேன். இன்னும் lkg2, மூக்குத்தி அம்மன் 2 என அடுத்தடுத்து ஐசரி கணேஷ் சாருடன் கை கோர்க்க
ரெடியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

Tags :
Advertisement