“10 வருடம் கலெக்டராக இருந்ததால் மக்கள் பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும்” - காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!
10 வருடமாக கலெக்டராக இருந்ததால், திருவள்ளூர் தொகுதி மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும் என்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி
சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் முன்னாள் ஐஏஎஸ்
அதிகாரி சசிகாந்த் செந்தில். நேற்று திருவள்ளூரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ-வுமான துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருவள்ளூர் காங். மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசியதாவது :
“நான் சென்னையில் பிறந்தாலும் திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில்
தான் வளர்ந்தேன். ஆகையால் எனக்கு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நன்கு
அறிமுகம். நான் ஐஏஎஸ் படிப்பு முடித்த பின்னர், கர்நாடகாவின் மூன்று மாவட்டங்களில் 10
வருடமாக மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளேன். அங்கிருந்த அரசியல் சூழ்நிலை பிடிக்காமல் பணியிலிருந்து விலகினேன். பின்னர் இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் காங்கிரஸ் பேரியக்கத்தால் தான் முடியும் என முடிவு செய்து இக்கட்சியில் இணைந்து பணியாற்றுகிறேன்.
தடுத்து நிறுத்தி வருகிறது. இதேநிலை நீடித்தால் கல்வி 50 ஆண்டுகள் பின்னோக்கி
செல்லக்கூடிய நிலை ஏற்படும்”
இவ்வாறு சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திருவள்ளூர் தொகுதி எனக்கு நன்கு அறிமுகமான தொகுதி. ஆகையால் இந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். வரக்கூடிய ஐந்து ஆண்டு காலத்தில் இந்த தொகுதி மிகப்பெரிய வளர்ச்சியடையும். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பதால் திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து எப்படி பெற வேண்டும் என்ற வழிமுறைகள் எனக்கு நன்றாக தெரியும். அதன்படி வழிமுறைகளை பின்பற்றி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவேன். மேலும் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இருந்த எம்.பி. ஜெயக்குமார் பல திட்டங்களை இங்கு செயல்படுத்தி உள்ளார். அதில் பாதியில் விடப்பட்டுள்ள பணிகளை சீராக முடிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதையும் நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.