For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு..!

பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
09:19 PM Oct 04, 2025 IST | Web Editor
பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
”மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

Advertisement

”தமிழக முதல்வராக மட்டுமல்லாமல் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழர்களின் சுயமரியாதை பகுத்தறிவு சமூக நீதி சிந்தனை உள்ளிட்டவற்றை பாதுகாக்கிறோம் என்றால் அதற்கு இம்மண்ணில் சுயமரியாதை இயக்கம் வேறூன்றியது தான் காரணம். திராவிடம் மாடல் ஆட்சி செல்ல வேண்டிய பாதையை தீவு திடல் தான் முடிவெடுக்கிறது என கூறியது நான்தான்.

பெரியார் மீது கல், கத்தி, செருப்பு போன்றவை வீசப்பட்டது. ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் பெரியாரின் புகைப்படத்தை திறந்ததில் பெருமைப்படுகிறேன். திருச்சி சிறகானூரில் உருவாக்கப்பட்டு வரும் பெரியார் உலகத்திற்கு எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை  வழங்குவதை பெருமையாக உணர்கிறோம்.

சாதி பெயரால் இருந்த விடுதிகளை சமூக நீதி விடுதிகளாக மாற்றி உள்ளோம். மக்களிடம் இருக்கும் வேற்றுமையை வேரறுக்க நாங்கள் செய்த அனைத்தையும் உங்களால் ஒதுக்கி விட முடியவில்லை. நூறாண்டுகளில் மாற்றத்திற்கான விதைகளை மட்டுமே விதைத்துள்ளோம். மாறமாட்டோம் என இருக்கிறவர்கள் என்ன மாதிரியான வேலைகளை செய்து வருவார்கள் என செய்திகளாக பாருங்கள். கடைசித் தமிழர்கள் இருக்கும் வரையில் சுயமரியாதை இருக்கும் வரையில் தமிழனம் எழுந்து போராடும். கொள்கையற்ற அதிமுகவினரால் 10 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து இந்த நான்கு ஆண்டுகளில் பலப்படுத்தி உள்ளோம். வரலாறு காணாத வளர்ச்சி பாதையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறோம். திமுகவை வேரோடு வேர் மண்ணோடு வீழ்த்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஏழாவது முறையாக திமுகவை ஆட்சி அமைத்திட இந்தக் கூட்டணி வெற்றிக்கு நீங்கள் எல்லாரும் துணை இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசிமுடித்தார்.

Tags :
Advertisement