சொந்த தயாரிப்பில் திருநங்கையாக களமிறங்கும் சிம்பு!
நடிப்பு, இசை, பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் சிம்பு,
கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தயாரிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது பிறந்தநாளின்போது (பிப்.3) வெளியிட்டஎக்ஸ் பதிவில், இறைவனுக்கு நன்றி. தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இதைத் தவிர எனது 50-வது படத்தை தொடங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் இது கனவு திரைப்படம். நீங்க இல்லாமல நான் இல்ல” என்று கூறி புதிய போஸ்டரை வெளிட்டார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் அவர் திருநங்கை கதாபாத்தில் நடிப்பதாகவும் அதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இதற்கு முன்பு விஸ்வரூபம் படத்தில் திருநங்கையர் போல் தோன்றி அசத்தியிருந்தார்.
சிம்பு கமல்ஹாசனுடன் இணைந்து தற்போது தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 49வது படமாக உருவாகியிருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சிம்புவின் 49வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும், 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியானது.