For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் சிம்பு?- எந்த படத்தில் தெரியுமா...

05:24 PM Mar 27, 2024 IST | Web Editor
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் சிம்பு   எந்த படத்தில் தெரியுமா
Advertisement

தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவருக்கு பதில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

நாயகன் எனும் மெகா ஹிட் திரைப்படத்திற்கு பின்னர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்  கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் திரைப்படம் அண்மையில் முடிவாகி படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி நாயகியாக த்ரிஷா, நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் கூட்டாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தக் லைப் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி அண்மையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் நடிகர் கமலஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றிருந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டதால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்திலும் அதிகம் இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் காரணங்களுக்காக படப்பிடிப்பு  சற்று தாமதமாக்கப்பட்டு வருகிறது

இந்த படத்தில் ஏற்கனவே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த துல்கர் சல்மான். படபிடிப்பின் தாமதம் மற்றும் தேதிகள், கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதே சில காரணங்களால் ஜெயம் ரவியும் இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

இப்படத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.கமலஹாசன் உடன் நடிக்க இருந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் கதாபாத்திரத்திற்கு நடிகர் சிலம்பரசன் பொருத்தமாக இருப்பார் என திரை குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் சிம்பு தற்போது மும்மரமாக நடத்தி வருகிறார். ரசிகர்களால் சிம்பு என அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன். அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச் சிவந்த வானம், ஈஸ்வரன், மாநாடு,பத்து தல படத்தை தொடர்ந்து மிகப்பெரிய ஓபனிங்க்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு உலக நாயகன் கமலஹாசனோடு இணையும் இந்த படத்தை சிம்புவின் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

Tags :
Advertisement