‘STR51’-ல் காதலின் கடவுளாக சிம்பு!
20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணிக்கும் நடிகர் சிம்புவுக்கு இன்று(பிப்.03) பிறந்த நாள் என்பதால் அவரின் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் படத்தில் இருந்து வாழ்த்து போஸ்டர் வெளியானது. தொடர்ந்து சிம்புவின் 49வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
இதையடுத்து அவரின் 50வது படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க சிம்புவே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். முன்னதாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#vintagestrmood#STR51 #AGS27
@Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @malinavin @onlynikil @prosathish #KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/mnZuqYONsp— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
இந்த நிலையில் சிம்பு - அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிம்பு தனது எக்ஸ் பதிவில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். அதன்படி சிம்புவின் 51 படத்திற்கு 'God Of Love' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், “காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…?” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பதிவில், இப்படம் ஃபேண்டஸி ஜானரில் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.