For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் | மிரட்டிய சுப்மன் கில்... ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் அணி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
06:27 AM Apr 07, 2025 IST | Web Editor
ஐபிஎல்   மிரட்டிய சுப்மன் கில்    ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் அணி
Advertisement

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஹைதராபாத்தில் நேற்று (ஏப்.6) நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் அடித்தது.

Advertisement

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

குஜராத் அணி 16.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்த சுப்மன் கில்லும், 35 ரன்களுடனும் ஷெர்பேன் ரூதர்போர்டும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags :
Advertisement