Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு... சினிமா பாணியில் நடந்த கொள்ளை!

கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:18 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப ஊழியர்கள் வேனில் வந்தனர். பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த கொள்ளையர்கள் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவத்தில் கிரீஷ் வெங்கடேஷ் என்ற வங்கி ஊழியர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு நபர் படுகாயமடைந்தார்.

Advertisement

பின்னர் கொள்ளையர்கள் ரூ.93 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
ATMatm robberyCrimegunshothospitalKarnatakanews7 tamilNews7 Tamil UpdatesPoliceRobbery
Advertisement
Next Article