For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி - உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி!

மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:10 PM May 04, 2025 IST | Web Editor
நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி   உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (வயது 17). இவர்  நடப்பாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று(மே.04) செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மாணவி வழக்கம் போல் நேற்று இரவு படுக்கை அறைக்கு சென்று உள்ளார். இன்று தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவர் தாயார் அதிகாலை நான்கு மணிக்கு மகளை எழுப்புவதற்காக மாணவி அறைக்கு சென்றார்.

அப்போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார? என மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு நடைபெற்று வரும் இந்த சூழலில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement