For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகை வெல்ல போகிறாள் | வெளியானது ‘அன்னபூரணி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

08:18 PM Nov 18, 2023 IST | Web Editor
உலகை வெல்ல போகிறாள்   வெளியானது ‘அன்னபூரணி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
Advertisement

அன்னபூரணி படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அன்னபூரணி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். தற்பொழுது, நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement