Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாகை அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் #SexualHarassment - மனநல ஆலோசகர் POCSO சட்டத்தில் கைது!

03:45 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

நாகை அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சுனாமிக்கு பிறகாக தாய் அல்லது தந்தையர் இழந்தவர்கள் காப்பகத்தில் படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் 65க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும்போது பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த் நிலையில் விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரின் பெயரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வேம்பரசன் மன நல ஆலோசகரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி ” குழந்தைகள் காப்பகத்தில் பெண் மனநல ஆலோசகரை நியமிக்க நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Tags :
Annai Sathya HomeChild AbuseChild Sexual HarrasmentCrime
Advertisement
Next Article