Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்! 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

02:55 PM May 07, 2024 IST | Web Editor
Advertisement

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகாரளிக்க முன் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார்.  அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

இதையும் படியுங்கள் : போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டுள்ள இரு பெண்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், 2 எஃப்.ஐ.ஆர்கள் போடப்பட்டுள்ளன.  அதில் 44 வயதான பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில்,  ரேவண்ணாவின் எம்.பி. மாளிகையில் வைத்து, தான் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள 40 வயதைக் கடந்த இரு பெண்களையும்,  சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரேவண்ணாவின் இல்லத்துக்கே அழைத்துச் சென்று,  சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  நீதிமன்றக் காவலில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணாவிடம்,  சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மேலும் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டு,  அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும்,  அவர்களில் பெரும்பாலானோர் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர்,  ரேவண்ணா மீது புகாரளிக்க முன் வந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
CongressINDIAAllainceKarnatakampNDAAllaincePMOIndiaPrajwalRahulGandhi
Advertisement
Next Article