For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை - குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

06:12 PM Nov 27, 2023 IST | Web Editor
காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை   குழந்தைகளுக்கு 30  ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு
Advertisement

காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Advertisement

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி,  கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.  கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால்,  நாளை முதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘போர் நிறுத்தத்தை நீட்டிப்பதுதான் நமது இலக்கு. இன்னும் நிறைய பிணைக் கைதிகளை மீட்கவும்,  காஸாவில் உள்ள மக்களுக்கு நிறைய மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாக உள்ளது என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து பிணைக் கைதிகளும் வெளியேறும் வரை போர் நிறுத்தத்தைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.  இன்னும் 2 முதல் 4 நாள்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதன் மூலம் மேலும் பல கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்வதேச நாடுகளும்,  இஸ்ரேல் பிணைக் கைதிகளின் குடும்பங்களும் இஸ்ரேலைப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றனர்.  மேலும், ஒரு நாளைக்கு 200 லாரி மனிதாபிமான உதவிகளை 2 மாதத்திற்கு அனுப்புவது மிகவும் அவசியம் என ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் அத்னான் அபு ஹன்சா தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட காசா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா. உணவு உறுதித் திட்டத்தின் தலைவர் மெக்கெய்ன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "காசாவில் தீவிர பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் பேரழிவு தரும் சம்பவங்கள் நிகழும். பஞ்சம் தன்கூடவே கடுமையான நோய்களையும் கொண்டுவரும்.

ஆகையால் உடனடியாக உதவிகள் வேண்டும். இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்படும் என்பதைக் கணித்ததன் அடிப்படையில் இப்போது கிடைக்கும் உதவிகள் நிச்சயமாகப் போதாது. இந்த 4 நாட்கள் போர் நிறுத்தத்தால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம். இது மிகவும் குறைவானதே. பட்டினியில் உள்ள அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் அதற்கு நாங்கள் பாதுகாப்பாக எல்லா பகுதிகளையும் அடைய வேண்டும்" என தெரிவித்தார்.

ஏற்கெனவே யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் காசாவில் உள்ள குழந்தைகள் மத்தியில் 30 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர பஞ்ச அபாயம் குறித்து ஐநா உணவு உறுதித் திட்ட அமைப்பும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 4 நாட்களில் மட்டும் காசாவுக்கு 200 ட்ரக்குகளில் உணவு, நிவாரணப் பொருட்கள் சென்றுள்ளனர் என்று இஸ்ரேல் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்க, இருதரப்பினருக்கும் சரிசமமான சுதந்திரம், மாண்பை உறுதி செய்ய வேண்டும். அதுவே தீர்வாகும். இந்த இலக்கை எட்டும்வரை நாங்கள் (அமெரிக்கா) ஓயமாட்டோம்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement