பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர் சுட்டுக்கொலை!
தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர்களில் ஒருவரான அல்தாப் லல்லி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரின் பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதில் ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்ததாகவும் ஒயிட் நைட் கார்ப்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் என்கவுண்டரில் எல்.இ.டி. தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார். பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனையை பலப்படுத்தியுள்ளனர்.