Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
06:52 AM Feb 21, 2025 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Advertisement

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமான சில மருத்துவ கவனிப்புகள் அவருக்கு தேவைப்படுவதாகவும், எனவே, பரிசோதனைக்காக  டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CongressHospitalizedINCNews7Tamilnews7TamilUpdatessonia gandhi
Advertisement
Next Article