ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத செங்கோட்டையன் : சமரச பேச்சுவார்த்தையில் அதிமுக!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், அவருடன் சமரச பேச்சுவார்த்தையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஈடுபட்டனர்.
11:14 AM Mar 17, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
Advertisement
இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், செங்கோட்டையன் மட்டும் பங்கேற்கவில்லை. பட்ஜெட் தாக்கல் முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் எம்எல்ஏ செங்கோட்டையன் உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் - செங்கோட்டையன் இடையே மோதல் நிலவுவதாக பேச்சுகள் எழுந்து வருகிறது. இதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.