Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

தவெக தலைவர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
04:53 PM Nov 26, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
Advertisement

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் செங்கோட்டையன். இவர் அதிமுக சார்பில் சுமார் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் அமைப்பு செயலாளராக செங்கொட்டையன் செயல்பட்டு வந்தார்.

Advertisement

இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டார். மேலும் அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனிடையே செங்கோட்டையன், நடிகர் விஜயின் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளார் எனவும் நாளை (வியாழக்கிழமை)  பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில், செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். இன்று காலை 11.45 மணியளவில் சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்திற்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.

Tags :
ADMKAIADMKChennaiSengottaiyantvkTVK Vijayvijay
Advertisement
Next Article