செம்மொழி பூங்கா - 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை சொம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூங்காவில் மலர்களை வைத்து பல உருவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பூங்காவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்த மலர்களை பார்வையிட்டு, மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்மைகள் என 20 விதமான உருவங்களில் மலர் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ அல்லது புகைப்படங்கள் உள்ளே சென்று எடுக்க விரும்புபவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.