For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடைபெறாது" - அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு என்பது இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
12:46 PM Sep 19, 2025 IST | Web Editor
தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு என்பது இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
 தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடைபெறாது    அமைச்சர் கோவி செழியன் பேட்டி
Advertisement

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தளப் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன், "மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின். செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட ஒன்று. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் துவங்குவதற்கு முன்பு வரையறுக்கப்பட்ட விஷயம்.

இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். எனவே விடுப்பு காலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் தான் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில் தான் நடக்குமே தவிர தேர்தலுக்காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement