தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்றார்!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை, பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், அவரை மாற்றி விட்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கடந்த இரு ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. அதன்படி தலைவர் பதவிக்கு பலர் போட்டியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அண்மையில் திடீரென அவர் மாற்றப்பட்டு செல்வபெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்தது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏ.செல்லக்குமார் எம்.பி, மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ. சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.