சீமானின் மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கேட்க ஒத்துக்கொண்ட சீமான் தரப்பு அதை மனப்பூர்வமாக செய்யவில்லை. அவரது பிராமண பாத்திரத்தை படித்து பார்த்தாலே அவரது வன்மம் தெரியும். தற்போதும் வெளியில் தன்னை பற்றி தவறாக தான் பேசிவருகிறார். பாதிக்கப்பட்ட நகர் ஒரு நடிகை என்றும், அரசியல்வாதியான சீமானால் பல ஆண்டுகள் துன்புறுத்த பட்டதாக கூறினார்
அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிரான அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்று விட்ட இந்த நடிகை 11 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்து அதே புகாரை தெரிவித்திருக்கிறார் என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், எதற்காக விஜயலட்சுமி பெங்களூர் சென்றார் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி தரப்பு சீமான் மற்றும் அவரது கட்சிக்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் சென்று விட்டதாகவும் அது மட்டும் இல்லாமல் தனது சினிமா வாழ்க்கையும் சீரழிந்து விட்டார் என கூறினர். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறுகிறோம். ஆனால் மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்தனர்.
இறுதியாக நீதிபதிகள், இந்த விவகாரத்தை எத்தனை நாள் இவ்வாறு இழுத்துக்கொண்டு செல்வது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவாருங்கள். இருவரும் தங்களுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.