"அப்டேட்டில் இல்லாத தலைவராக இருக்கிறார் சீமான்" - அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு அப்டேட்டில் இல்லாத தலைவராக இருக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் காய்ச்சல் வாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஆய்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
" தமிழ்நாட்டில் எந்த சாலையில் விபத்து ஏற்பட்டாலும் 48 மணி நேரங்களில் உயிரை காப்பாற்றுகிற மகத்தான திட்டம் அறிமுகமாகி உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் விபத்துக்கு உள்ளானவர்கள் மூன்று லட்சம் பேர் விருப்பத்தில் காப்பாற்றப்பட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு அப்டேட்டிலும் இல்லாத தலைவராக இருக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியிட நிரப்பப்படவில்லை என ஒரு போலியான அறிக்கை வெளியிடுகிறார்.
இதையும் படியுங்கள் : ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற முதல்வர்கள், அடுத்து தகுதி
பெற்றவர்கள் என பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 26 பேரில் அந்த 14 பேருக்கு பணியாளர்கள் வழங்கப்பட்டு அக்டோபர் 3ஆம் தேதி பணியில் சேர்ந்து விட்டார்கள். 36 மருத்துவக் கல்லூரியில் தகுதி பெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த சம்பவம் கூட தெரியாமல் ஒரு மாதத்திற்கு பிற்பாடு ஒரு அரசியல் கட்சி சேர்ந்தவர் சொல்வது உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது.
இன்னும் நிரப்பப்பட வேண்டிய பணியில் 2,553 பணிகள் நிரப்பப்பட வேண்டியதாக உள்ளது. 2553 பணியிடங்களுக்கு ஜூலை 15ம் தேதி மனுக்கள் தரப்பட்டிருக்கிறது. அதற்கு 23917 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். வருகின்ற ஜனவரி 27ம் தேதி 2553 காலி இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும். இதற்கான பணிகளை துறை அதிகாரிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.