இடைநிலை ஆசிரியர் தேர்வு - 1768 பணியிடங்களுக்கான தகுதி, விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!
இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப். 14 முதல் ஆன்லைன் மூலம் மார்ச் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) 2023-2024-ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு அறிவிப்பை, தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் (SGT) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768 (தோராயமாக) காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப். 14-ம் தேதி முதல் இணையவழி வாயிலாக பெறப்பட உள்ளது.
இந்த TN TRB SGT 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024 அன்றைய நாளின் படி, 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி பிரிவினருக்கு - அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம். இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி/பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு + Diploma/B.EL.Ed, இளநிலை பட்டம் + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ள இயலும்.
இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரூ.20,600/- முதல் ரூ.75,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் TN TRB SGT 2024 எழுத்து தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க SC / ST / உடல் ஊனமுற்றவர்கள் – ரூ.300/-, மற்றும் மற்ற நபர்கள் – ரூ.600/- செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 14.02.2024 அன்று முதல் 15.03.2024 அன்று வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.