Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுட்டெரிக்கும் வெயில்.... 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த மும்பைவாசி!

12:26 PM May 04, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையை சேர்ந்த ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்து செய்துள்ளார்.  

Advertisement

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது.  வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்கள்,  நுங்கு,  இளநீர்,  ஐஸ்கிரீம்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் மார். 1 முதல் ஏப். 15 வரையிலான காலக்கட்டத்தில் தனது ஆர்டர்கள் குறித்து கூறியுள்ளது.

அதன் அறிக்கையின் படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 16% அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் தான் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமான ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பபட்டுள்ளன.  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்களும் செய்யப்பட்டுள்ளன.  காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80,000 ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,  இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

மேலும்,  2024 ஆம் ஆண்டில்,  guilt-free மற்றும் vegan ஐஸ்கிரீம்களுக்கான ஆர்டர்கள் 2023 ஆம் ஆண்டை விட 70% அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.  மேலும் இந்த அறிக்கையில் வெளிவந்த ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் மும்பையில் உள்ள ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார்.  இதுதான் இந்திய அளவில் இதுவரை மிகவும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.

Tags :
Ice creamsMumbaisummerSwiggyTemperature
Advertisement
Next Article