For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுட்டெரிக்கும் கோடை வெயில் - சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு!

10:09 AM Apr 23, 2024 IST | Web Editor
சுட்டெரிக்கும் கோடை வெயில்   சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு
Advertisement

கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.

Advertisement

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.  மேலும், மக்களின் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் ஏரி,  குளம் போன்ற குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது.

இதையும் படியுங்கள் : “மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” - வானிலை ஆய்வு மையம்!

இந்நிலையில்,  சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களான,  செம்பரம்பாக்கம்,  பூண்டி, சோழவரம்,  புழல்,  கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளின் நீர்இருப்பு,  தற்போது 59.71 சதவீதம் நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.  மேலும் நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,153 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.

இதையடுத்து,  மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 288 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 200 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 187 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதில் குடிநீர் தேவைக்காக 208 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  மேலும்,  3,645 கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,455 மில்லியன் கன வரை நீர் இருப்பு உள்ளது.  மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 158 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 2,831 மில்லியன் கன அடியாக உள்ளது.  குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 186 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில்,  தற்போது நீர் இருப்பு 396 மில்லியன் கன அடியாக உள்ளது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே,  ஏரிகளின் நீர் இருப்பு 60 சதவீதம் வரை சரிந்த நிலையில் இனிவரும் காலங்களில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

Tags :
Advertisement