Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரையில்  பள்ளி மாணவர் கடத்தல் வழக்கு! - முன்னாள் காவலர் உள்ளிட்ட 5 பேர் கைது!

10:08 AM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

மதுரையில்  பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் காவலர்
உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது 15 வயது மகன் 10ம்
வகுப்பு படித்து வருகிறார். ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும்போது ஆட்டோ
ஒட்டுனருடன் பள்ளி மாணவனை கடந்த 11ம் தேதி 2 கோடி ரூபாய் கேட்டு கடத்தல் கும்பல் கடத்தியது.  இதையடுத்து, கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் இருவரையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வழக்கில் தேனீ மாவட்டத்தில் உள்ள போடியை சேர்ந்த
செந்தில்குமார் என்பவர் காவலராக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில்
பணியாற்றியுள்ளார். கடைசியாக 2020ம் ஆண்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் பணியாற்றிய போது குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

இதையும் படியுங்கள் : இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு - 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!

இந்த கடத்தில் சம்பவத்தில் செந்தில்குமாருடன் திருநெல்வேலி ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், மகாராஜன் ஆகிய 5 பேரை மதுரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வசதியான பின்புலம் உள்ள குழந்தைகளைக் கடத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏற்கனவே சென்னையில் ஒருமுறை இதுபோன்ற கடத்தல் சம்பவத்தில் இதே கும்பல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அதே நோக்கத்திலேயே இப்போது மதுரையிலும் இந்த கும்பல் கடத்தலில் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கடத்தல் வழக்கில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி
வருகின்றனர்.

Tags :
arrestedkidnappedkidnappersMaduraiPolicestudent
Advertisement
Next Article