தென் கொரியாவில் பள்ளியில் கத்திக்குத்து - ஆசிரியர் உட்பட 6 பேர் காயம்!
தென் கொரியாவின் சியோங்ஜுவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி இன்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினார். மாணவர் தாக்கியதில் ஆசிரியர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் பட்டதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள் : “தெறிக்கவிடலாமா?”… டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்?
அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என்றும் மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை 8.40 மணியளவில் நடைபெற்றது.
தாக்குதல் நடத்திய மாணவர் இச்சம்பவத்திற்கு பின்னர் அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் குதித்தார். மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்வாய்ப்பாக காயமடைந்த அனைவரும் அபாயகட்டத்தை தாண்டியாக தகவல் வெளியாகியுள்ளது. =போலீசாரின் விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் மனநலச் சீர் வேண்டும் மாணவர் என தெரியவந்தது. போலீசார் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.