#America -வில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், மீண்டம் அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி நேற்று (டிச.16) வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. மாணவர்கள் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் நேற்று (டிச.16) திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஆசிரியர், மாணவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.