Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

11:42 AM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . 

Advertisement

பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஒரு வழக்கின் தீர்ப்பின்படி, பட்டியலின எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பட்டிலின இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

பஞ்சாபின் உள் ஒதுக்கீடு வழங்கய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் வழங்கிய பட்டிலின இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற தீர்ப்பு ரத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ReservationSCSTState GovernmentSupreme court
Advertisement
Next Article