For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

10:17 AM Nov 20, 2023 IST | Web Editor
சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்  காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை
Advertisement

சென்னையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பால்,  குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

Advertisement

சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO Drive against Crime Ofendors) என்ற  தனிப்படையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகப்படுத்தினார்.

மேலும்,  கூடுதல் ஆணையர்கள்,  இணை ஆணையர்கள்,  துணை ஆணையர்கள் ஆலோசனையின்பேரில்,  காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதன் மூலம், வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை  கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனைத்  தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர்,  கடந்த 12.11.2023 முதல் 18.11.2023 வரை 7 நாட்களில் பதிவான  செல்போன் திருட்டு தொடர்பான 6 வழக்குகளில் தொடர்புடைய, 8 - நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும்  ரூ.4,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 7 நாட்களில் வாகன திருட்டு தொடர்பான வழக்குகளில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் சென்னை பெருநகர காவல்துறைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற வாகன  மற்றும் செல்போன் திருட்டில்  ஈடுபடுபவர்கள் மீது  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Tags :
Advertisement