சவுதி பேருந்து விபத்து - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சவுதி அரேபியாவின் மெக்காவில் இருந்து மதீனாவிற்கு பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சமபவத்திற்கு இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
இந்த நிலையில் சவுதி அரேபியா பேருந்து விபத்து சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.