For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கிய நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள்!

09:02 PM May 17, 2024 IST | Web Editor
படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கிய நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள்
Advertisement

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' படம் வெளியாகியுள்ள நிலையில்,  சந்தானம் ரசிகர்கள் முதல் காட்சி பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் வழங்கினர்.

Advertisement

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்   'இங்க நான் தான் கிங்கு.' இத்திரைப்படத்தில் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.  அந்த வகையில் இப்படம் புதுச்சேரியிலும் இரண்டு திரையரங்குகளில் வெளியானது.  இதனையடுத்து,  புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரி மாநிலத் தலைவர் அருண் தலைமையில் சந்தானம் கட்டவுட்டுக்கு மலர் தூவி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் கட்டவுட்டுக்கு 5 லிட்டர் சந்தனத்தைக் கொண்டு சந்தன அபிஷேகமும் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் காட்சியை பார்க்க பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட்டை வழங்கியதுடன், ஒரு பலாப்பழத்தையும் பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்ற மாநில தலைவர் அருண் கூறும்போது,  "இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் இன்று சந்தானம் நடித்த படத்தை பார்க்க வந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பலாப்பழம் அன்பளிப்பாக வழங்கினோம்" என்று கூறினார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement