"தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லை, ஆனால் சினிமா பார்க்கிறார்கள்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
நாட்டின் 79வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாஜக சார்பில் "இல்லம் தோறும் மூவர்ணக் கொடி" என்ற பெயரில் தேசபக்தி விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்றது. சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை அருகே யாத்திரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் இருசக்கர வாகனத்தில் பேரணியை தொடங்கியவர் பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சந்திப்பில் நிறைவு செய்தார்.
இந்த யாத்திரை பேரணியில் 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு, எல்.முருகனுடன் பேரணியாக சென்றனர். அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பெருமாள் மற்றும் சிதம்பரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடாக நாம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், பிரிட்டிஷ் பெண்ணுக்கு தள்ளி நான்காவது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
2027-இல் மூன்றாவது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாகவும், 2047-இல் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதற்காக மக்கள் அனைவரும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை வலியுறுத்தி இன்று மூவர்ண தேசியக்கொடி பேரணி நடந்து கொண்டிருப்பதாக கூறினார்.
அனைத்துப் பகுதியிலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிற நோக்கில் காசி தமிழ் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் போன்ற நிகழ்வுகளை பாரத பிரதமர் நடத்தி வருகிறார். நமது தேசிய பெருமையை எடுத்து சொல்ல முகையில் மூவர்ணக் கொடி பேரணி நடந்து கொண்டிருக்கிறது.
திமுக அரசாங்கம் சமூக நீதி பேசுவதற்கு துளியும் அருகதை அற்றவர்கள். ஜனநாயக முறைகள் தனது கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களது கோரிக்கையை கேட்பதற்கு திமுக அரசுக்கு நேரமில்லை. இரண்டு நிமிடங்கள் கூட பேசாமல் சினிமா படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தான் தனியார் மையம் கொண்டுவரப்பட்டது.
ராகுல் காந்தி பொய்யாக வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழக அரசு வளர்ச்சி என்ற மாயை காட்டிக் கொண்டிருப்பதாகவும், குஜராத், உத்திரபிரதேசத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அவர்களின் வளர்ச்சி ஒப்பிடும்போது நாம் பின்தங்கி இருக்கிறோம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த திட்டங்கள், நிதி ஆகியவற்றின் மூலமாகத் தான் தமிழகம் வளர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.