Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

என்னது வெண்டைக்காயில் சமோசாவா…? – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

08:08 AM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் தெருவோர உணவு வியாபாரிகள் வெண்டைக்காய்  சமோசாக்களை விற்பனை செய்வதை கண்டு அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

Advertisement

சமோசா என்பது அனைவரும் விரும்பி விரும்பி உண்ணும் ஒரு உணவாகும்உணவுப் பதிவர்களைக் கவரவும், வாடிக்கையாளர்களைக் கவரவும், தெருவோர வியாபாரிகள் உணவில் புதிய சோதனைகளைச் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சமோசாவின் வரையறையையே தெருவோர வியாபாரி ஒருவர் மாற்றியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக சமோசாவில் வெண்டைக்காய் எப்படி அடைக்கப்பட்டுள்ளது என காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வெண்டைக்காய் சமோசா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சமோசா விற்கும் விற்பனையாளரிடம் உருளைக்கிழங்கு சமோசா இல்லை, ஆனால் வெண்டைக்காய் சமோசாக்கள் இருப்பதைக் காணலாம். விற்பனையாளர் இந்த வெண்டைக்காய் சமோசாவை காய்கறிகள் மற்றும் பச்சை சட்னியுடன்  சேர்த்து பரிமாறுகிறார்.

 

இந்த வீடியோ foodi_ish என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது, இது இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Tags :
foodfoodie for lifeSamosastreet foodtasty food
Advertisement
Next Article