For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மும்மத மக்கள் வழிபடும் பழைய பள்ளி திருத்தலத்தில் சம்பந்தி விருந்து!

03:17 PM Mar 18, 2024 IST | Web Editor
மும்மத மக்கள் வழிபடும் பழைய பள்ளி திருத்தலத்தில் சம்பந்தி விருந்து
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் பழமை வாய்ந்த பள்ளியாடி பழைய பள்ளி மும்மத
திருத்தலத்தில் இன்று மத நல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது. 

Advertisement

இரவிபுதூர்கடையை அடுத்த பள்ளியாடியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் அமைந்துள்ளது.  இந்த திருத்தலம் மத நல்லிணக்க தலமாக விளங்குகிறது.  இங்கு ஆண்டாண்டு காலமாக  மும்மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.  இந்த திருத்தலத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் விளக்கு அமைந்துள்ளது.  இந்த விளக்கில் இந்து,  கிறிஸ்தவ,  முஸ்லிம் என மும்மத அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.  அந்த வகையில் இந்துக்கள் விளக்கேற்றியும்,  கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியும்,  முஸ்லிம்கள் தூபம் காட்டியும் அவரவர் முறைப்படி வணங்குகின்றனர்.  இந்நிலையில் பழைய பள்ளி அப்பா திருத்தத்தில் முப்பெரும் விழா நேற்று சர்வ மத பிரார்த்தனையுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் அனைத்து மதத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.  சர்வ மத பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவனை வழிபட்டனர்.  அங்கு எண்ணெய்  மற்றும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.  மேலும் பக்தர்கள் பழங்கள் அரிசி,  காய்கறிகள், எ ண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர்.

பக்தர்கள் வழங்கும் பொருட்களை வைத்து 5000 கிலோ அரிசியை சமைத்து சமபந்தி விருந்து வழங்குகின்றனர்.  ஆண்டாண்டு காலமாக நடைபெறும் முப்பெரும் விழாவில் மத நல்லிணக்க விழா,  சர்வ மத பிரார்த்தனை,  சம்பந்தி விருந்து ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.  கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கின்றனர்.  இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement