சல்மான் கானின் ”சிக்கந்தர்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ”சிக்கந்தர்” படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாரயாணன் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை இன்று காலை 11.07 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில், ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததையொட்டி படக்குழு இன்று மாலை 4.05 மணிக்கு படத்தின் டீசரை வெளியிட்டனர். டீசரின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘எஸ்கே 25’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு, சுதீப் இளமோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.