சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!
சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021 முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அதையும் மீறி பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி : #IND vs SA – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு! அடுத்தடுத்து விக்கெட் இழப்பால் தடுமாற்றம்!
பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார். அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.